.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Saturday, 17 September 2016

உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு செய்வது

டீக்கடைகள், சாலையோர உணவகங்கள் தொடங்கி உணவு தயாரிப்பில் ஈடுபட் டுள்ள அனைத்து நிறுவனங்களும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு செய்வது கட்டாயமாகிறது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவு விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களையும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின்கீழ் கொண்டுவரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இதன்படி டீக்கடைகள், சாலையோர உணவகங்கள், சிறு ஹோட்டல்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள், அரசு அங்கன் வாடிகள், அரசு மற்றும் தனியார் பால் உற்பத்தி நிலையங்கள் என உணவு உற்பத்தி மற்றும் உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் இனி உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு அல்லது உரிமம் பெற்றுதான் இயங்க முடியும்.

அந்தந்த மாநிலங்களில் செயல்படும் டீக்கடைகள், சாலையோர உணவகங்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் வரும் 30-ம் தேதிக்குள் அவரவர் மாநிலங்களில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்குக் குறை வான வரவு செலவு உள்ள கடை அல்லது நிறுவனங்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். ரூ.12 லட்சத்துக்கும் அதிகமான வரவு செலவு உள்ள நிறுவனங்கள் தொகைக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி நிறுவனத்தின் பெய ரில் உரிமம் பெற்று பின்னர் இயங்க வேண்டும்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிக மான உரிமம் பெற்ற நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும், இரண்டரை லட்சத் துக்கும் அதிகமான எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இருப்பதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இதே எண்ணிக்கை அளவுக்கு பதிவு செய்யப் படாமலும் உணவு தயாரிக்கும் கடை களும் நிறுவனங்களும் இருக்க வாய்ப்பு உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் உணவுப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் வகையில் அனைத்து உணவு நிறுவனங்கள் குறித்த பட்டியலை தயாரித்து வருகிறது. இதன்மூலம் உணவுப் பொருள் கலப்படம், சுகாதாரமற்ற உணவு ஆகியவற்றின் விற் பனையைத் தடுக்கவும், புகார் எழுந்தால் அதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

இதற்காக உணவு நிறுவனங்களை பட்டியலிடும் வகையில் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் திட்டம் செயல்படுத் தப்படுகிறது. தமிழகத்தில் கடை மற்றும் நிறுவனங்களை பதிவு செய்துகொள்வதற் காக மாவட்டம்தோறும் தனியாரைக் கொண்டு பொது சேவை மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

இவற்றின் மூலம், கடை மற்றும் நிறு வனங்கள் முதல்கட்டமாக இணையதளத் தில் பதிவு செய்யப்படுவதுடன் அவற் றுக்கு தற்காலிக பதிவு அல்லது உரிமச் சான்றிதழ் வழங்கப்படும். பின்னர் அந்த பகுதியில் உள்ள உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் மூலம் பதிவு மற்றும் உரிமம் பெற்ற நிறுவனங்களை நேரடியாக ஆய்வு செய்து, அவற்றுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment