.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Saturday, 17 September 2016

இந்திய இராணுவ செய்திகள்

இந்திய இராணுவ செய்திகள்

இரஷ்யாவிடம் இருந்து பெரிய அளவிலான ஆயுதக் கொள்முதல் செய்ய இந்தியா திட்டம்

அமெரிக்காவிடம்இருந்து இந்தியா தற்போது அதிக அளவிலான ஆயுதங்கள் வாங்கியும்,புதிய ஒப்பந்தங்கள் செய்தும் வருகிறது.இதனால் இரஷ்யாவுடனான உறவு சிறிது பாதிக்கப்பட்டது உண்மை.ஆனால் இந்தியா தற்போதும் இரஷ்யாவுடைய நண்பன் எனபதை நிரூபிக்கும் பொருட்டு பெரிய அளவிலான ஆயுதக் கொள்முதலை மேற்கொள்ள உள்ளது. 

பெரிய திட்டங்களான 5ம் தலைமுறை விமானம் இணைந்து தயாரிப்பு,காமோவ்  Ka-226T இலகுரக யுடிலிடி வானூர்தி மற்றும் 39,000 கோடி அளவிலான எஸ்-400 அமைப்பு  வாங்குதல்,2வது அணு ஆயுத சக்தி கொண்ட நீர்மூழ்கி குத்தகைக்கு எடுத்தல் போன்ற திட்டங்களை வேகப்படு்த்த உள்ளது. இந்தியா ஏற்கனவே அகுலா வகை அணுசக்தி நீர்மூழ்கியான ஐஎன்எஸ் சக்ராவை 900மில்லியன் டாலர் செலவில் 10 வருட குத்தகைக்கு 2012ல் வாங்கி செயல்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் வரும் காலத்தில் நடைபெற உயர்மட்ட அளவிலான அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் பேசப்பட உள்ளது. 16வது இந்தியா-இரஷ்ய இராணுவ தொழில்நூட்ப ஒத்துழைப்பு குழு வரும் வியாழன் மற்றும் புதன் சந்திக்க உள்ளனர். 

இதில் கூட்டு இராணுவத் தளவாட தயாரிப்பு,கப்பல் கட்டுதல் மற்றும் கூட்டு விமானத் தயாரிப்பு பற்றி பேச்சுவார்த்தை நடைபெறும்.எது எப்படியோ!! இந்தியா இரண்டு வல்லரசு நாடுகளிடமும் (அமெரக்கா,இரஷ்யா) சமமான அணுகுமுறையை பின்பற்றி வருகிறது.உதாரணமாக   இராணுவப் பயிற்சி.

இந்த மாதத்தில் இந்திய இராணுவம் அமரிக்கா மற்றும் இரஷ்யா இராணுவத்துடன் (தனித்தனியாக ) யுத்தப் பயிற்சி மேற்கொள்ள உள்ளது.அமெரிக்க மற்றும் இந்திய துருப்புகள் இணைந்து மேற்கொள்ளும் வருடாந்திர போர்ப்பயிற்சியான "யுத் அபயாஸ்" இந்த வருடம்  உத்ரகண்டில் செப்டம்பர் 14-27 தேதிகளில் நடைபெற உள்ளது.இதில் அமெரிக்க துருப்புகளும் இந்திய இராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்களும் கலந்து கொள்வர்.

அதே போல் இரஷ்யா இந்தியா இணைந்து மேற்கொள்ளும் "இந்திரா" போர்பயிற்சி இரஷ்யா துருப்புகளுக்கும் இந்தியாவின் குமாவோன் ரெஜிமென்ட் துருப்புகளுக்கும் செப்டம்பர்  22 முதல் அக்டேபர் 2 வரை இரஷ்யாவின் விளிடிவோஸ்டோக்கில்  நடைபெறும்.மேலும் இந்தியா இரஷ்யா கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும்  இந்திரா கடற்படை மோர்பயிறச்சி டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.அதே சமயம் அமெரிக்கா,இந்தியா,ஜப்பான் கடற்படைகள் பங்கேற்ற மலபார் போர்ப்பயிற்சி சில நாட்களுக்கு முன் தான் நடந்து முடிந்தது.

இந்தியா  FGFA தயாரிப்பில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கவலை தெரிவித்துள்ளது.ஆனால் இந்தியாவோ வடிமமைப்பில் சிறு மாறுதல்களை எதிர்பார்க்கிறது. மேலும் இரஷ்யா தனது அணுசக்தி கொண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ளது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்குறிப்பின படி அமெரிக்கா தனது அணுசக்தி விமானம் தாங்கி கப்பலுக்கான தொழில்நுட்பத்தை அதாவது அணுசக்தி ஏற்படுத்தும் அமைப்பை  இந்தியாவிற்கு வழங்க தயாராக இல்லை . 




 ரபேல் ஒப்பந்தம் மீதான இறுதிக் கட்ட முடிவை எடுப்பதற்காக ஒப்பந்தத்தின் முழு விவரம் அடங்கிய பைல் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த பல பில்லியன் டாலர் மதிப்பிலான ரபேல் போர்விமான ஒப்பந்த்தின் இறுதி ஒப்பந்த நகல் கடைசி கட்ட அனுமதிக்காக பிரதமர் அலுவலகம் அனுப்பப்பட்டுள்ளது.

இதைப் பற்றி மேலதிக விவரம் தர அமைச்சகம் மறுத்துள்ளது.பிரான்ஸ் தரப்பு அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

7.8 பில்லியன் டாலர் செலவில் 36 விமானங்கள் வாங்கப்பட உள்ளன.ஒவ்வொரு விமானமும் அதனோடுஇணைந்த ஆயுதங்களோடு தான் வரும்.

அதில் ஒன்று மீட்டியோர் ஏவுகணைகள் உலகின் சிறந்த ஏவுகணைகளாக உள்ளன.இஸ்ரேல் தயாரிப்பு Israeli helmet mounted display யும் வரும்.

இரபேல் விமான ஒப்பந்தம் விமானப்படைக்கு இன்றியமையாத ஒன்று ஆகும்.விமானப்படையின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளது .இந்நிலையில் புதிய விமானங்கள் வாங்க நாம் செய்யும் தாமதத்திற்கு நாம் பெரிய விலை தர நேரலாம்.



இராணுவ தீர்வை நாடி இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்மிடமே இருந்திருக்கும் - விமானப்படை தளபதி

1947-ம் ஆண்டு நாம் ராணுவ தீர்வை நாடி இருந்தால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்மிடமே இருந்திருக்கும் என்று விமானப்படை தளபதி கூறினார்.

இந்தியா தயக்கம்

டெல்லியில் நடைபெற்ற விமானப்படை குறித்த கருத்தரங்கத்தில் விமானப்படை தளபதி அருப் ராஹா பேசுகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நெஞ்சில் தைத்த முள்ளாக குத்திக்கொண்டு இருக்கிறது, பாதுகாப்பு தேவைகளுக்கு, நடைமுறைக்கேற்ற அணுகுமுறையை பின்பற்றுவது இல்லை என்ற வழக்கத்திற்கு மாறான கருத்தை தெரிவித்தார். 

அருப் ராஹா பேசுகையில், “ ஆக்கிரமிப்பு காஷ்மீரை குறிப்பிட்டு பேசுகையில் இந்தியாவின் பாதுகாப்பு சூழ்நிலை தற்போது பாழ்பட்டு கிடக்கிறது. ராணுவ பலத்தின் ஒரு அங்கமான விமானப்படையின் பலம், இந்த பிராந்தியத்தில் மோதலை முறியடிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் அவசியம். நம்முடைய உயர்ந்த சித்தாந்தங்களால் ஆளப்பட்டு வருகிறோம். பாதுகாப்பு தேவைகளுக்கு, நடைமுறைக்கேற்ற அணுகுமுறையை பின்பற்றுவது இல்லை. சுமுகமான சூழ்நிலையை பராமரிப்பதற்கு கூட ராணுவ பலத்தை பயன்படுத்தாமல் புறக்கணிக்கிறோம்.

கடந்த காலங்களில் போர் ஏற்பட்டபோது கூட எதிரிகளை ஒடுக்குவதற்கு விமானப்படையை பயன்படுத்த இந்தியா தயக்கம் காட்டியது,” என்றார். 



மேலும் பேசுகையில், கடந்த 1947-ம் ஆண்டு, காஷ்மீர் மீது படையெடுப்பு நடந்தது. அப்போது, விமானப்படை நமது வீரர்களுக்கு உதவிகரமாக இருந்தன. போர் தளவாடங்களை போர்முனைக்கு கொண்டு போய்ச் சேர்த்தன. அப்போது, ராணுவ தீர்வு கண்ணுக்கு எட்டிய தொலைவில் இருந்தது. ஆனால், தார்மீக அடிப்படையில், பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதற்கு நாம் ஐ.நா. சபைக்கு பிரச்சினையை கொண்டு சென்றோம். அதனால் பிரச்சினை இன்னும் நீடிக்கிறது. ராணுவ தீர்வை நாடி இருந்தால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்மிடமே இருந்திருக்கும். இப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீர், நம் நெஞ்சில் தைத்த முள்ளாகி விட்டது.

1962-ம் ஆண்டு போரிலும், விமானப்படை அதிகமாக பயன்படுத்தப்படவில்லை. 1965-ம் ஆண்டு போரின்போது, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் விமானங்கள் நமது விமான தளங்கள் மற்றும் விமானங்கள், உள்கட்டமைப்புகள் மீது குண்டு மழை பொழிந்தன. அப்படி இருந்தும், அரசியல் காரணங்களுக்காக, நமது விமானப்படையை பயன்படுத்த இந்திய அரசு அனுமதிக்கவில்லை. நாம் பயங்கர பின்னடைவை சந்தித்த போதிலும், பதிலடி கொடுக்கவில்லை. 1971-ம் ஆண்டு போரில்தான், விமானப்படையின் பலம் முழுமையாக பயன்படுத்தப்பட்டது. முப்படைகளும் முற்றிலும் இணைந்து போரிட்டதால், வங்காளதேசம் உருவானது.

 ஆனால், இப்போது நிலைமை மாறி உள்ளது. நாட்டை பாதுகாக்க விமானப்படையின் பலத்தை பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அருப் ராஹா கூறிஉள்ளார். 

இந்திய இராணுவச் செய்திகள்

No comments:

Post a Comment