145 பட்டங்கள் பெற்றவர்!
🌻நாம் ஒரு டிகிரியை முடிப்பதற்கே ஒரு யுகத்தை கடப்பது போல் நினைப்போம். அப்படியும் முடித்தால், எத்தனை பேர் அரியர்ஸ் இல்லாமல் முடிக்க முடியும்?
🌻இங்கே சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் 145 கல்வி பட்டங்களை தன் கையில் சாதாரணமாக வைத்திருக்கிறார்.
🌻 வாழ்க்கையில் பொருட்செல்வத்தை சேர்க்க ஆசைப்படுவோம். ஆனால், இந்த
பேராசிரியர் கல்வி செல்வத்தை சேகரித்து வைத்துள்ளார்.
🌻 அவருடைய விசிட்டிங் கார்டு ஒரு புத்தகம் போல இருக்கும். இப்போது உங்களுக்கே புரியும் எத்தனை டிகிரி முடித்துள்ளார் என்று.
🌻வடசென்னையைச் சேர்ந்தவர் வி.என்.பார்த்திபன். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். முதல் இளங்கலை பட்டத்தை கஷ்டப்பட்டு முடித்துள்ளார்.
🌻 பிறகு, முப்பது ஆண்டுகளாக கிட்டதட்ட
12 எம்.பில்.,
9 எம்.பி.ஏ.,
10 எம்.ஏ.,
8 எம்.காம்.,
3 எம்.எஸ்சி.,
8 எம்.ஏ. சட்டம்
என்று பட்டங்களை வரிசையாக வைத்துள்ளார்.
🌻இதுபற்றி பார்த்திபன் கூறியது: “முதல் பட்டத்துக்கு பின்பு, நீதி துறையில் பணிக்குச் சென்றேன்.
🌻 மாற்றுச் சான்றிதழ் தேவைப்படாத இடத்தில் எல்லாம் ஒரே நேரத்தில் பல படிப்புகளுக்கு விண்ணப்பித்தேன்.
🌻 கடந்த 30 ஆண்டுகளாக பரீட்சைக்குத் தயார் செய்தும், புது கோர்சுகளுக்கு விண்ணப்பித்தும் என் வாழ்க்கையை கழித்துள்ளேன்.
🌻 பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமையை தேர்வு எழுதவும், ஆராய்ச்சி சம்பந்தமான பேப்பர்கள் எழுதவும் செலவிட்டுள்ளேன்.
🌻 தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பல கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பாடம் கற்பித்து வருகிறேன்.
🌻படிப்பு என்பது மிக எளிது. படிப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆனால், கணித பாடப் பகுதி மட்டும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
🌻அதனால், அதன் மீது ஆர்வம் காட்டவில்லை. என்னுடைய வெற்றிக்கு முழு காரணம் என் மனைவி.
🌻 படிப்பில் முழு கவனம் செலுத்துவதால்,
குடும்ப பொறுப்புகளை கவனிக்க முடியவில்லை. என் மனைவி எல்லாவற்றையும் பார்த்து கொண்டு, எனக்கு ஊக்குவித்தலையும் அளிக்கிறார்.
🌻எனது மனைவி வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவரும் ஒன்பது டிகிரி வைத்துள்ளார்” என்று கூறினார்.
No comments:
Post a Comment