.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Saturday, 17 September 2016

பாராலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற பதக்கங்கள்

பாராலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற  பதக்கங்கள் 
==================================================
.
பாராலிம்பிக் போட்டிகள் 1960 முதல் 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றன. இந்தியா 1968ல் முதல்முறையாக பங்கேற்றது. 1960, 1964, 1976, 1980ல் பங்கேற்கவில்லை.

ரியோவில் நடைபெறும் இந்த பாராலிம்பிக்குடன் சேர்த்து இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் உள்பட 10 பதக்கங்கள் பெற்றுள்ளது. ( செபடம்பர் 10 / 2016 வரை ) 

முதல் தங்கம் 50 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில் முரளிகாந்த் பெட்கார் மூலம் 1972ல் ஜெர்மனி கெட்டில்பார்க்கில் நடந்த பாராலிம்பிக் மூலம் கிடைத்தது.

2வது தங்கம் 2004ல் ஏதென்சில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் கிடைத்தது. ராஜஸ்தான் மாநிலம் சாரு மாவட்டத்தை சேர்ந்த தேவேந்திர ஜாஜ்ஜாரியா இதை பெற்றுத்தந்தார்.

3வது தங்கத்தை,  தற்போது  T - 42 உயரம் தாண்டும் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு பெற்றுத்தந்துள்ளார்.

1984ல் அமெரிக்காவில் நடந்த  பாராலிம்பிக்கில் ஜோகிந்தர்சிங்பேடி குண்டுஎறிதலில் வெள்ளியும், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் வெண்கலமும் வென்று 3 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார். 

தற்போதைய ரியோ போட்டியின் T - 42 உயரம்  தாண்டும் போட்டியில் மற்றொரு இந்திய வீரர் வருண் சிங் பாடி வெண்கலம்  வென்றுள்ளார்.

No comments:

Post a Comment