.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Sunday, 18 September 2016

காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்



உடலானது ஆரோக்கியமாக இருக்க சுவையாக சமைத்து உண்ணும் காய்கறிகளை நன்கு பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு சமைக்க பயன்படும் காய்கறிகளை சிலருக்கு எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று இன்னும் தெரியாது. ஏனோ தானோவென்று வாங்கிய பின், என்னை ஏமாற்றிவிட்டான் என்று புலம்புவதே பலரது நிலைமை. மேலும் முற்றல் இல்லாமல் பிஞ்சாக இருந்தால் சமையலானது சுவையாக இருக்கும்.
எனவே சுவையான சமையல் செய்ய நல்ல காய்கறிகளை வாங்க வேண்டும். அதற்கு சில டிப்ஸ் இருக்கிறது. 

உருளைக்கிழங்கு: முளைக்கட்டாமல், பச்சை பச்சையாக நரம்பு தெரியாமல் இருக்க வேண்டும். மேலும் தோலை கீறினாலே கையோடு வர வேண்டும்.

.பெரிய வெங்காயம்: பெரிய வெங்காயத்தின் மேல் பகுதியில் இருக்கும் தண்டுப் பகுதி பெரிதாக இல்லாமல் வாங்க வேண்டும்.

  வெள்ளை வெங்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும் 

பூண்டு: பூண்டை வாங்கும் போது பல் பல்லாக வெளியே நன்கு தெரியுமாறு இருப்பதை வாங்க வேண்டும்

பெங்களூர் தக்காளி: நன்றாக சிவந்த தக்காளியாக இருப்பதை வாங்க வேண்டும். அதுவும் பெங்களூர் தக்காளி ஒரு வாரம் கூட கெடாமல் இருக்கும்.

பச்சை மிளகாய்: மிளகாயானது நீளமாக இருந்தால் காரம் குறைவாக இருக்கும். அதே குண்டாக இருந்தால் காரம் அதிகமாக இருக்கும். மேலும் இந்த குண்டு மிளகாயை சேர்க்கும் போது வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

முருங்கைக்காய்: 'முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து வாங்கணும்' என்று சொல்வார்கள். இவ்வாறு முறுக்கும் போது நன்கு வளைந்தால், காய் முற்றவில்லை என்று அர்த்தம்.

கத்தரிக்காய்: கத்தரிகாய் வாங்கும் போது தோலானது மென்மையாக இருக்க வேண்டும். முற்றல் காயாக இருந்தால் தோலானது கடினமானதாக இருக்கும்.

இஞ்சி: தோலை கீறினால், தோலானது ஈஸியாக பெயர்ந்து வர வேண்டும். அப்போது தான் நார்ப்பகுதி குறைவாக இருக்கும்.

காலிஃப்ளவர்: குருமாவுக்கு சுவையைத் தரும் காலிஃப்ளவரை வாங்கும் போது பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் வாங்க வேண்டும். இதில் தான் காம்புகள் தடிமனாக இருக்காது.

புடலங்காய்: கெட்டியாக இருக்கும் புடலங்காயை வாங்க வேண்டும். இதில் தான் சதைப்பகுதி அதிகமாகவும், விதைப்பகுதி குறைவாகவும் இருக்கும்.

பீன்ஸ்: பீன்ஸில் 2 வகைகள் இருக்கிறது. பிரெஞ்ச் பீன்ஸில் நார் அதிகமாக இருக்கும். புஷ் பீன்ஸில் நார் குறைவாக இருக்கும். இவற்றில் நார் குறைவாக இருப்பதையே அதிகம் விரும்புவர். இந்த பீன்ஸ் வாங்கும் போது தோலானது மென்மையாக இருக்க வேண்டும். அதுவே மிகுந்த சுவையாக இருக்கும்.

பாகற்காய்: பாகற்காயை வாங்கும் போது உருண்டையாக இருப்பதை வாங்குவதைவிட, தட்டையான, நீளமான காயாக வாங்க வேண்டும்.

மேற்கூறியவாறு வாங்கினால் காய்களானது நீண்ட நாட்கள் இருப்பதோடு, சமையலும் சுவையாக இருக்கும்.

 வாழை தண்டு : பொறியல், சூப் - ஆகியவை செய்யலாம். மேல் பகுதி நார் அதிகம் இருக்காது, உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினால் நல்லது

  சர்க்கரை வள்ளிகிழங்கு : உறுதியான கிழங்கு இனிக்கும் அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்  

மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் மெதுவாக சென்றால் நல்லது என்று அர்த்தம்

 கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
  

குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

  மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

  பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது

பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

 கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

சேப்பங்கிகிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் 
  
 சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது


வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

 சௌ சௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

அடுத்த ஆண்டு முதல் டிஜிட்டல் கல்விச் சான்றிதழ்களை வழங்க மத்திய அரசு திட்டம்!!!

அடுத்த ஆண்டு முதல் டிஜிட்டல் கல்விச் சான்றிதழ்களை வழங்க மத்திய அரசு திட்டம்!!!

🌻அடுத்த கல்வியாண்டு முதல் பட்டங்களும், கல்விச் சான்றிதழ்களும் டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை
எடுத்து வருகிறது.

🌻தேசியக் கல்வி ஆவணக் காப்பகம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

🌻 அதில் பங்கேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:

🌻நாட்டில் உள்ள அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக, "டிஜிட்டல் இந்தியா' பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கியுள்ளார்.

🌻முதலீட்டாளர்களின் நிதி வளங்களைப் பாதுகாக்கும் வகையில், நிதி சார்ந்த பத்திரங்களை டிஜிட்டல்மயமாக்கும் பணி, ஏற்கெனவே நிறைவடைந்து விட்டது.

🌻 இந்நிலையில், கல்விச் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக தேசியக் கல்வி ஆவணக் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.

🌻இந்த முறையில், புதிய கல்விச் சான்றிதழ்களை மாணவர்கள் பெறுவதோடு, தாங்கள் ஏற்கெனவே பெற்ற சான்றிதழ்களையும் இணையத்தில் பதிவேற்றிக் கொள்ளலாம்.

🌻 அவர்களது விவரப் பட்டியலில் அனைத்துச் சான்றிதழ்களும் கிடைக்கும். 

🌻இதன் மூலம் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் பணியில் அமர்த்துபவர்களுக்கு எளிதில் கிடைப்பதோடு, சான்றிதழ்களைப் பெறுவதற்காக பல்கலைக்கழகங்களை நேரில் அணுகுவதும் குறையும் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

இதயத்தில் அடைப்பு உள்ளதா?

இதயத்தில் அடைப்பு
உள்ளதா?...
இதோ உடனே செல்லுங்கள்
திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார்.
நாடித் துடிப்பை பார்த்தே உங்கள்
நோயை கண்டுபிடிக்கிறார்.
வெள்ளிக்கிழமை தவிர்த்து
மற்ற எல்லா நாட்க்களிலும்
வைத்தியம்.
இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே
ரத்த குழாய் அடைப்பு
மாறுகிறது.
பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம் .
தேவையுள்ளவர்
இந்த வாய்ப்பை
நழுவவிடாதீர் .
மிக மிக முக்கியமான தகவல்
என்பதால் இதனை அதிகமான
அளவில் பகிர்ந்து
உங்களுடைய நண்பர்களுக்கு
இத்தகைய தகவல் சென்று சேர
உதவுங்கள்.
இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும் நம் அனைவருக்கும்
மகிழ்ச்சியே.....
Sukumaran Vaidyans G A Pharmacy &
Nursing Home. Neyyattinkara P.O.,
Thiruvananthapuram-695572,Kerala State. Phone :0471 2222364

ஆப்பிளை பழிவாங்கிய சாம்சுங் நிறுவனம்.....

ஆப்பிளை பழிவாங்கிய சாம்சுங் நிறுவனம்.....

 அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம்.

சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் வாதாடியது.

கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் (6,200 கோடி) அபராதமாக அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பானது. சாம்சங் நிறுவனத்தின் 26 வகையான ஸ்மார்ட் போன்களில் ஆப்பிள் நிறுவன தொழில்நுட்பம் காப்பியடிக்கப்பட்டு இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்துக்கு 30 லாரிகள் வந்தன. அங்கிருந்த செக்யூரிட்டி, அட்ரஸ் மாறி வந்து விட்டதாக கூறியிருக்கிறார். தங்களிடம் இந்த அட்ரஸ்தான் கொடுக்கப்பட்டுள்ளதாக லாரி டிரைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போதுதான் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்குக்கு ஒரு போன் வந்துள்ளது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ குவான் கியூன் பேசினார். உங்களுக்கு தர வேண்டிய நஷ்ட ஈட்டைத்தான் அனுப்பியிருக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

அத்தனை லாரிகளிலும் சில்லரை காசுகள். 5 சென்ட் நாணயங்கள். மொத்தம் 2 ஆயிரம் கோடி காசுகள். ஆப்பிள் நிறுவனத்தின் குடோன்களில் 30 டிப்பர் லாரிகளில் இருந்தும் நாணயங்கள் கொட்டப்பட்டுள்ளன. 100 கோடி டாலருக்கும் சில்லரை.

இதை எப்படி எண்ணுவது, எங்கே பாதுகாப்பாக வைப்பது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள். வங்கிகளில் இவ்வளவு சில்லரைகளை ஏற்க மாட்டார்கள். ஒரே நேரத்தில் இவற்றை நோட்டாக மாற்றுவதும் கடினம் என்பதால் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என முடிவான போது, அதை எப்படி கொடுப்பது என்பது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அதனால் சில்லரைகளை அனுப்பி பழி வாங்கியுள்ளது சாம்சங்.

எங்கள் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. எல்லா ஸ்மார்ட் போனும் செவ்வக வடிவத்தில்தான் இருக்கும். செவ்வக வடிவத்துக்கு எல்லாம் காப்புரிமை வாங்கி வைத்துக் கொண்டு, யாரும் அந்த சைசில் போன் தயாரிக்கக் கூடாது என்கிறார்கள். எங்களிடமே காப்புரிமை விளையாட்டு விளையாடுகிறார்கள். எங்களுக்கும் விளையாடத் தெரியும், என பேட்டி கொடுத்திருக்கிறார் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் லீ குன் ஹீ.