.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Sunday, 28 August 2016

பழங்கள் சாப்பிடும் முறை;


பழங்கள் சாப்பிடும் முறை;

பழங்கள் ஒரு முக்கியமான உணவு;
சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.
பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட 
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.

இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.

பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.
அதனால் தயவு செய்து பழங்களை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன்சாப்பிடுங்கள்.!!

நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.

கிவி பழம்;

இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம்.
இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம்.

ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

ஆப்பிள்;

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே!

ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!

ஸ்ட்ராபெர்ரி :

பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

ஆரஞ்சு:

இனிப்பான மருந்து.
ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.

தர்பூசணி;

மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான்.
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது.மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.

கொய்யா& பப்பாளி

இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.

கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

👃👀👂👅👄💪😊

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில்
மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன்
குழந்தையாக இருக்கும் போது அவனுடைய
உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர
வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற
எலும்புகளுடன் இணைந்து விடுகிறது...

2. நாம் 6விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம்.
சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்...

3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள்
ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில்
சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக
வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம்
தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம்
இடது கால் செருப்பை விட வலதுகாலின்
செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த
சிறு வித்தியாசத்தால் தான்...

4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள்
தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது.
அவனது எலும்பு தொடர்ந்து 4
நாட்களை வரை செயல் படுகிறது. தோல்
தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண்
மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம்
பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம்
செயல்படுகிறது. அவனது சிறுநீரகம்
தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக
அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல்
உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்
லை...

5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்
ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில்
குழந்தை பிறக்கிறது. 28
நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும்
பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது.
இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள
பெண்களுக்கு குழந்தை பிறப்பும்
சற்று முன்னாடியே (குறை பிரச வம்)
அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில்
கவனம் கொள்ள வேண்டும்...

6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8
மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம்
பகலில் நமது வேலைகள்
செய்யும்போது தண்டு வடத்திலுள்ள
குறுத்தெலும்பு வட்டுகள்
ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால்
உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்
தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால்
நமது உடம்பின் உயரம் கூடுகிறது...

7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம்
127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள்
உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின்
ஆயுட்காலம் 120 நாட்கள்...

8. நம்உடலில் சுமார் 20 லட்சம்
வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.
அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6
லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன...

9. நமது கைகளில் நடுவிரலில் நகம்
வேகமாகவும், கட்டை விரலில் நக ம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல்பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம்
மெதுவாக வளர்கிறது...

10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல்
தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம்,
இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்...

11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக்
குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர்
கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4
முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது.

12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித
உறுப்பு கட் டை விரல்கள்...

13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம்
தாடை எலும்பு...

14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம்
தண்ணீரைக் கொண்டதாகும்...

15. கல்லீரல் 500 விதமான
இயக்கங்களை நிகழ்த்துகிறது...

16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630...

17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம்
பங்கு ரத்தம் உள்ளது...

18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்த
 இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1
மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன...

19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம்
வயது வரை வளர்கிறது...

20. மனித முகங்களை மொத்தம் 520
வகைகளுக்குள் அடக்கி விடலாம்...

21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ...

22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9
லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும்
போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும்
தேவைப்படுகிறது...

23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும்
மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள்
ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால்
போன்றவற்றால் பாதிப்படைகிறது...

24.பெண்களைவிட
ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது.
பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள்
ஆண்கள் மூளையில் இருக்கிறது...

25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்...

26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்...

27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்...

28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க
நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள்
கிடை யாது...

29. மூளையின்மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது...

30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்...

31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை /
கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற
வேறுபாடே தெரியாது...

32. மனித உடலின் தோலின் எடை 27
கிலோ கிராம்...

33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன...

34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை,
முழங்காலை மாற்றலாம். ஆனால்
மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம்
ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன்
தான் அவன் அந்நியன் தான்...

35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க
இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின்விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும்
போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம்அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது...

36. நமது உடலிலுள்ள செல்கள்
பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது.
ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள்
இறந்து புது செல்கள் பிறக்கின்றன...

37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம்
வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல்
இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம்
வளர்கிறது...

38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54
தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது...

39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின்
இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது.
ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம்
ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப்
செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை,
கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால்
போது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்...

40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத்
தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்
திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது...

41. நமது உடலின் நீளமான
எலும்பு தொடை எலும்பு தான்...

42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500
சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100
சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது...

43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால்
உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின்
வலியை உணர்த்துவது மூளையே...

44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம்
கூடுதலாக வியர்க்கிறது...

45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்...

46. உடலில் ரத்தம் பாயாதபகுதி கருவிழி மட்டுமே...

47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப்
பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும்
உட்கொள்கிறோம்..

48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர
அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன...

49. நம்முடைய தலை ஒரே எலும்பால்
உருவானது அல்ல, 22 எலும்புகளில்
உருவானதாகும்...

50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள்
உள்ளதாகவும், பெண்களின் முடியை விட
ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும் அறியப்படுகிறது..

51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில்
தூங்கி விடுகின்றான்...

52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்...

53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன்
முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக
இவ்வளவு வார்த்தைகளைத்தான்
பயன்படுத்துகிறார்கள்...

54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள்உள்ளன...

55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம்வளர்கிறது..

56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040தடவை சுவாசிக்கின்றோம்..

57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)..

58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள்
வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால்
சாதனைகளை நிகழ்த்தலாம்..

59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும்
இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது.
இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது...

60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும்வளரும்...

61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த
சிவப்பணுக்கள் உள்ளன...

62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.

63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக
குறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி,
வயிற்றுப் போக்கு ஏற்படும்.

64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர்
எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர்
வியர்வை வெளியிடுகிறான்..

65. சிந்தனையின் வேகம்
அல்லது ஒரு யோசனையின் தூரம்
என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150
மைல்களாகும்..

66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம்
அதிகமாக துடிக்கிறது...

67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல்
நுனிவரை உள்ள நீளமும், மேவாய்
கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..

68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30
கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்..

69. உடலில் உண்டாகும் உஷ்ணம்
வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..

70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல்
முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும்
இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம்
30 செகண்டு ஆகும்...

71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர்
ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய
அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான்
மனிதனுக்கு கோபம் வருகிறது...

72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம்ஆகும்.

73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக
நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால்
ஆணுக்கு பெண்குணமும்,
பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்...

74. தானாகமூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம்
ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது...

75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50
லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில்
22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால்
மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை..

76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான்.
அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால்
என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான்
அவரவர் இதயம் இருக்கும்...

77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள
'ஆலவியோலி' என் னும் சிறிய காற்று அறைகளின்
எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..

78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால்ஆனது..

79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள்உள்ளன..

80. மனிதனுக்கு 4 வகையான பற்கள்உண்டு..

81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள்9000 உள்ளன..

82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள்உள்ளன.

83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும்
தசை நாக்கு..

84. மனித உடலில் அதிக செல்களால் உருவான
பகுதி மூளை,மூளையின்
வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால்
உருவானது..

85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம்தூங்குகிறான்.

86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½
லட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள்.
இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.

87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600
மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்..

88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார்
375 முறை ஏற் படுகிறது..

89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம்
தடவை லப்டப் செய்கி றது. வருஷத்திற்கு 4
கோடி தடவை..

90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20சதுரஅடிகள்.

91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20
ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்..

92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900
பென்சில்களை உரு வாக்கலாம்.

93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7
பார் சோப்புகளை செய்ய லாம்..

94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல
ஆணி ஒன்று செய்யலாம்..

95. மனித உடலில் அதிகமாக காணப்படும்
தாதுப்பொருள் கால்சியம்..

96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர்
நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம்
வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது...

97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன்
குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்ககொட்டாவி விடுகிறோம்...

98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின்
எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும்
நின்று விடுகிறது.
இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான்
சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத
அளவிற்கு வளர்ச்சி...

99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான்
என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம்
வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள்
வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது..

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

தலை முடி வளர இயற்கை மருத்துவங்கள்

தலை முடி வளர இயற்கை மருத்துவங்கள்

முடி உதிர்வதைத் தடுக்க:

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். 

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

மண்பாண்ட மகிமை:

மண்பாண்ட மகிமை:

உலகின் முதன் முதல் மனிதன் செய்த தொழில் மண்பாண்டம். மண்பாண்ட சமையல்,ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது

☆ உணவில் சுவையைக்
கூட்டக்கூடியது. நீண்ட
நேரத்துக்குக் கெடாமலும் சுவை
மாறாமலும் இருக்கும். உணவும்
எளிதில் செரிமானம் ஆகும்.

☆ மண் பாத்திரத்தில் தயிரை
ஊற்றிவைத்தால் புளிக்காமல்
இருக்கும். தண்ணீர்
குளிர்ச்சியாகவும்,
சுவையாகவும் இருக்கும்.

☆ மண்பாண்டம் தவிர்த்து அந்தக்
காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு,
பித்தளை, வெண்கலம் என ஐந்து
வகையான உலோகங்களை நம்
முன்னோர்கள் பயன்படுத்தினர்.

☆ வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக்
குளிர்ச்சியைத் தரக்கூடியது.
பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச்
சமநிலைப்படுத்தும். பித்தளை
மற்றும் செம்புப் பாத்திரத்தில்
சமைக்கும் உணவு வயிறு
தொடர்பான பிரச்னைகள் வராமல்
தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக்
குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு
உண்டு.

☆ செம்புப் பாத்திரத்தில்
தண்ணீர்வைத்துக் குடித்தால்,
இருமல், இரைப்பு நோய் வராது.
இரும்புப் பாத்திரத்தில்
சமைக்கும்போது, உடலில் ரத்த
விருத்தி அதிகரிக்கும். உடலை
எஃகு போல உறுதிப்படுத்தும். கண்
சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
இளைத்தவனுக்கு இரும்புப்
பாத்திரம் என்பது அந்தக்கால
அறிவுரை.

☆ இப்படி உடல் ஆரோக்கியத்தைத்
தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப்
பாத்திரங்களைப் பயன்படுத்தினால்,
உடல் ஆரோக்கியமாக இருக்கும்.்

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு (7) அடிகள் நடப்பதற்கு என்ன பொருள் ?

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு (7) அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்  ?
**************************

சமஸ்கிரதத்தில் இதை " சப்தபதி " என்று கூறுவார்கள்.  ஆதாவது  ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேரந்து நடந்து வருவதாகும்.  அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம்
இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு தனது பிரார்த்தனையை சொல்கிறான்.

♥ முதல் அடி  :  பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்

♥ இரண்டாம் அடி  :  ஆரோக்கியமாக வாழ வேண்டும்

♥ மூன்றாம் அடி  :  நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்

♥ நான்காம் அடி  :  சுகத்தையும் செல்வத்தையும் அளிக்க வேண்டும்

♥ ஐந்தாம் அடி  :  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து பெற வேண்டும்

♥ ஆறாம் அடி  :  நாட்டில் நல்ல பருவங்கள் தொடர வேண்டும்

♥ ஏழாம் அடி  :  தர்மங்கள் நிலைக்க வேண்டும்

என்று பிராப்திப்பதாக சொல்லப்படுகிறது.  இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் பூக்ஷமமான மனோவியல் விசயத்தை இந்து தர்மத்தில்  உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.  இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால்  அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்பது சாஸ்திரம். உதாரணமாக சாலையில்  நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவர்  நடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாக நடக்க நேர்ந்தால் ,  ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிடுவோம்.  முழுமையாக ஏழு அடிகள்  ஒன்றாக நடக்க மாட்டோம்.  இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள்ளாக நடந்து விடும்.  இதை
அறிந்த முன்னோர்கள் ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதையும் நாம் உணர வேண்டும்..........

அதிமுக கொடியை வடிவமைத்த நடிகர்


  • அதிமுக கொடியை வடிவமைத்த நடிகர்
  • நகைச்சுவை நடிகர் பாண்டு என்றாலே, அவரின் விசித்திரமான உச்சரிப்பும், வாயசைவும்தான் நினைவுக்கு வரும்.அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து கொடுத்தவரும் இவர்தான். இது இந்தத் தலைமுறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. தனது அனுபவங்களைப் பற்றி அவர் நினைவு கூர்ந்ததாவது:
  • அதிமுக தொடங்கப்பட்ட 1972-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்தார் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி இருக்கிறேன் தெரியுமா... என்றார். தெரியும் பத்திரிகையில் பார்த்தேன் என்றேன் நான். கட்சிக்கு பேர் என்ன எனக் கேட்டார். அதிமுக என்றேன். கட்சிக்கான கொடியை நீங்கள்தான் வரைய வேண்டும். இன்றிரவே இங்கேயே தங்கி வரைய வேண்டும் என்றார். அங்கே இருந்த அறைக்குள் என்னை அனுப்பிவிட்டு, வெளியில் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டனர். அதிமுக ஆரம்பிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை அப்போது தமிழகத்தில் இருந்தது. எம்.ஜி.ஆரின் வீடு இருந்த இடத்தை திரைப்பட சண்டைக் கலைஞர்கள்தான் காவல் காத்தனர்.
  • அப்போதுதான் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து முடித்திருந்தேன். எனது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் மூலமாக என்னைப் பற்றி தெரிந்து கொண்டே என்னை அழைத்திருந்தார் எம்ஜிஆர்.
  • இரவு 10 மணிக்கு அறைக்குள் சென்ற நான் 10.30-க்குள் கருப்பு- சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா சிரிப்பது போல ஒரு கொடியை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் தொண்டர்களை உசுப்பிவிடுவது போல இந்தக் கொடி இல்லையே. சிரிப்பில் போர்க்குணம் இருக்காது. கட்சியின் போர்க் குணத்தை வெளிக்காட்டும் விதத்தில் கொடியை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார்.
  • அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையை மனதில் வைத்து, அவர் கை நீட்டிப் பேசுவது போல கொடிக்கான படத்தை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் இந்தப் படத்தைக் கொடியாக மாற்றும்போதும் கை வெட்டுப்பட்டுவிடும் என்றார். கையைச் சுருக்கி நேராக இருப்பது போல வரைந்து கொடுத்தேன். அது பார்ப்பதற்கு, அண்ணாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல இருந்தது. அதைப் பார்த்தவர். ஏன் எம்.ஆர்.ராதா என்னை சுட்டது போதாதா என்றார். உடனே கையை சிறிது மேலே இருப்பது போன்ற இப்போதைய கொடியை வரைந்து கொடுத்தேன். கட்டித் தழுவி, மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார்.
  • அதேபோல, இரட்டை இலைச் சின்னத்தையும் நான்தான் வரைந்து கொடுத்தேன். அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தி, 5 பவுன் தங்கச் சங்கிலியும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் கொடுத்தார் எம்ஜிஆர்.
  • தமிழகம் முழுவதும் நான் வடிவமைத்த கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும் வேளைகளில் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றார் அவர்.


பாட்டி வைத்தியம் -வாழை இலை

பாட்டி வைத்தியம் - 
வாழை இலை:-

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.


2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.


4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் .
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்