.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Sunday, 4 October 2015

காலாண்டு தேர்வில் பின்தங்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி


  • பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் எந்தெந்த பாடங்களில்பின்தங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொண்டு சிறப்பு பயிற்சிகள் வழங்கும் நோக்கில், கோவை மாவட்டத்தில் காலாண்டு தேர்வுக்கான மதிப்பீட்டு பணி துவங்கியுள்ளது.
  • பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது, சிறப்பு வகுப்புகள் நடந்து வருகிறது. 
  • காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கவுள்ளன. இந்நிலையில், மாணவர்களின் பாடவாரியாக மதிப்பெண் விபரம், தேர்ச்சி விகிதம், கடந்த மாதங்களில் நடத்தப்பட்ட மாதந்திர தேர்வுகளுடன் ஒப்பிடுகையில் காலாண்டு தேர்வில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் என முழுமையான மதிப்பீடுகளை மாவட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளிலும் விடைத்தாள் திருத்தும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும், இணை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு மதிப்பீடு குறித்து ஆய்வு நடத்தப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில், மதிப்பீடு தொகுப்புகளை சேகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
  • முதன்மை கல்வி அதிகாரி அருள்முருகன் கூறுகையில், ''காலாண்டு தேர்வு முடிவுகளை மதிப்பீடு செய்வது சார்ந்த படிவங்கள் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 
  • இதில், எந்தெந்த பாடங்களில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர் என்பதை ஆய்வு செய்து, சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.