.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Thursday, 25 August 2016

கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்


ஓர் உண்மை சம்பவம்...

'வணக்கம்!! 
என் பெயர் பாலகிருஷ்ணன். 
ஒரு காலத்தில் சென்னை மற்றும் வேலூரில் என் பெயர் தெரியாத அரசு அதிகாரிகளே கிடையாது. 

இன்று நான் முகவரி கூட இல்லாமல் வாழ்கிறேன்.

கோயம்பத்தூரில் ஓரு கிராமத்தில் ஓரு ஓட்டு வீட்டில் நானும் என் மனைவியும் அனாதைகளாக...

நான் என் வாழ்வில் உணர்ந்த விசயத்தை உங்களிடம் பரிமாற்றம் செய்கிறேன். 

நான் அரசு பணியில் பல துறையில் பணியாற்றி உள்ளேன். சம்பளத்தை விட கிம்பளம் (லஞ்சம்) நிறையவே பெற்று சந்தோஷமாக இருந்தேன்.

ஆண்டவன் நம்மை நல்லா வச்சிருக்கான் என்று சந்தோஷமாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரம் செய்து வந்தேன்.

எனக்கு ஓரே மகன். நல்லா எம்.பி.ஏ. வரை படிக்க வச்சேன். 
ஒரு கிரவுன்ட் இடம் வாங்கி கார் பார்கிங், வீடு, கார், தோட்டம் என நாங்கள் சந்தோஷமாக இருந்தோம்.

நானும் ஓய்வு பெற்றேன். 
என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சென்னையில் ரூ.40,00,000-தில் பிளாட் வாங்கி குடியேறினேன்.

மருமகளும் கர்ப்பமாக இருந்தாள். 
7ம் மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு போன் வந்து என்னை தூக்கி போட்டது. போனில், அவர் சொன்ன விசயம்...

"உங்கள் மகன் பைக் விபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ளார் வந்து பாருங்க..." என்று. 

விழுந்தடித்து சென்று பார்த்தேன். 
என் மகன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். 
என் மருமகளுக்கு ஆண் பிள்ளை பிறந்தது. ஆனால் என் மகன் இரண்டு மாதத்தில் உயிர் பிரிந்து விட்டான்.

என் மருமகள் அவர்கள் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டாள். பின்னர் அவளுக்கு ஜீவனாம்சம் மற்றும் பேரன் வாழ்க்கை செலவு என வழக்கு தொடர்ந்து எங்கள் சொத்துக்களை எல்லாம் வாங்கி கொண்டாள்.

இப்போது எனக்கு கிடைக்கும் பென்சனை வச்சுத்தான் காலம் போகுது. சாப்பாடு செலவுகள், வீட்டுக்கு வாடகை போக முட்டி வலி, சர்க்கரை போன்ற நோய்கள் பற்றிக்கொண்டதால் மருந்து செலவு வேறு...

அப்போது தான் யோசித்தேன், 'ஏன் நம் வாழ்க்கை இப்படி ஆனது என்று...'

என் மனம் சொன்னது, 'நீ வாங்கிய லஞ்சம் தான் உன் வாழ்வை சீர்ழித்தது...' என்று. 

'சரி... லஞ்சம் வாங்காமல், என்னுடன் சம காலத்தில் பணிபுரிந்த என் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன்.' 

அவர் என் நிலை கண்டு மனம் சங்கடப்பட்டார்.

'சரிப்பா நீ எப்படி இருக்க..?' என கேட்டேன். 

அவர் சொன்னார், "நிம்மதியாக இருக்கேன்... உண்ண உணவு, உடுக்க உடை, பேரன் பேத்தி, ஓய்வு பணத்தில் சிறியதாக ஒரு வீடு, பையன், பொண்ணு தனியார் கம்பெனி வேலை...

நானும் என் மனைவியும் காசி ராமேஸ்வரம் போய் சிவனடியாரா இருக்கோம். தேவாரம் திருவாசகம் ஓதுதல், வாரா வாரம் சிவன் கோவில் உழவாரப் பணி என நிம்மதியா இருக்கேன்..." என்று சொன்னார். 

என்னை யாரோ செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன். 

நானும் கோவிலுக்கு போனேன் விபூதி குங்குமம் வைத்தேன். அபிஷேகம் எல்லாம் செஞ்சேனே. எனக்கு மட்டும் ஏன் இப்படி..?

அப்போது தான் என் காதில் அபிராமி அந்தாதி எங்கோ பாடியது என் காதில் விழுந்தது. 

"தனம் தரும், கல்வி தரும்...
ஒரு நாளும் தளர் வறியா மனம் தரும்...
தெய்வ வடிவும் தரும்...
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் அன்பர் என்பருக்கே...
கனம் தரும் அபிராமி கடைகண்களே."

உணர்ந்தேன் நாமும் கோவிலுக்கு போனது பத்துல ஒண்ணா போச்சே. 
நல்லா இருக்கும் போது உண்மையை உணரவில்லையே. 

உயிரற்ற பொருள் வாங்கி குவித்தேன். 
என் உயிர் உள்ளே உள்ள பொருளை இழந்தேன்.

இன்று...
வாழ்க்கையை இழந்து நிற்கிறேன்.

அரசன் அன்று கொல்வான்...
தெய்வம் நின்று கொல்லும்...

மக்களுக்கு செய்யும் சேவையே...
மகேசனுக்கு செய்யும் சேவை...

- ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரியின் ஒப்புதல்... புலம்பல் இது. 
=========================

மேற்கண்ட ஓய்வு பெற்ற அதிகாரியின் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் நம் அனைவருக்கும் நல்ல பாடம்... 

💐💐💐இந்த உண்மை சம்பவம் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு சமர்ப்பணம் 🙏🙏

ம.பொ.சி.யை மறந்த சென்னை


  • சென்னை நகரம் 22.8.1639ஆம் ஆண்டு உருவான நாளை "சென்னை தினம்" எனும் பெயரில் கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  •  பல்வேறு செய்தி ஊடகங்களில் சென்னை குறித்து வரலாற்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் சென்னையை மீட்க தமிழர்கள் ஆந்திரர்களோடு நடத்திய போராட்டம் குறித்தும் விடாப்பிடியாகப் போராடி தமிழகத்திற்கு சென்னையை மீட்டுத் தந்த ம.பொ.சிவஞானம் குறித்தும் எந்தப்பதிவும் இல்லை. தமிழரல்லாதவர்கள் ஊடகத்துறையில் செல்வாக்கு செலுத்துவதால் சென்னை மீட்பு போராட்டம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
  • சென்னை மீட்பு வரலாற்றை இனி சுருக்கமாக காண்போம். சென்னை நகரம் தொன்று தொட்டு தமிழர்களின் பூமியாகும். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆண்ட தொண்டை மண்டலப்பகுதியில் கட்டுப்பட்ட பகுதியாகும். பிற்காலத்தில் தொடர்ந்து படையெடுத்து வந்த தமிழரல்லாதவர்கள்  கையில் சென்னை நகரம் இருந்த போதும் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக இருந்துள்ளனர்.
  • 1912ஆம் ஆண்டில் ஆந்திரர்கள் ஆந்திர மகாசபை அமைத்து மொழிவழி மாகாணம் கேட்டுப் போராடி வந்தனர். அப்போது ஆந்திரர்கள் சென்னையில் சிறுபான்மையினராக வாழ்ந்த போதிலும் சென்னை நகரை தனக்கு சொந்தமாக்க விரும்ப வில்லை. 1920ஆம் ஆண்டில் நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்தது. அதில் ஆந்திரர்கள் தான் முதலமைச்சராக வந்தனர். 1920 முதல் 1947 வரை பதவிக்கு வந்த அறுவரில் ஐவர் ஆந்திரர். ஒருவர் தமிழர். இதன் காரணமாக சென்னை நகரம் ஆந்திரர்களுக்கு சொந்தம் என்ற கருத்து உருவாக்கப்பட்டது.
  • இந்திய விடுதலைக்கு (1947) முன்னர் டாக்டர். இராசேந்திர பிரசாத் தலைமையில் அரசியல் நிர்ணய மன்றம் அமைக்கப்பட்ட போது அதன் ஆலோசகராக சர்.பி.என். இராவ் என்பவர் இருந்தார். அவர் தமிழினத்திற்கு எதிரான ஒரு திட்டத்தை முன் வைத்தார். அத்திட்டத்தின் படி சென்னை மாகாணத்தை பிரிக்காமல் நிர்வாக வசதி என்ற பெயரில் இரண்டாகப் பிரிப்பது என்றும், அதன்படி வட சென்னை துணைமாகாணம், தென் சென்னை துணை மாகாணம் என்று இரண்டாக செயல்படுவது என்றும், இரு துணை மாகாணங்களுக்கும் சென்னை பொது தலைநகராக இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.
  • இத்திட்டத்தை தெலுங்குத் தலைவர்களான டாக்டர். இராதா கிருஷ்ணன், வி.வி.கிரி, தங்குத்தூரி பிரகாசம் பந்துலு ஆகியோர் ஆதரித்தனர். ஆந்திர மகாசபையும் வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியது. சர்.பி.என்.ராவ் திட்டத்தின்படி சென்னை மாகாணம் இரண்டு துணை மாகாணமாகப் பிரிந்திருந்தால் ஆந்திரருக்கு சென்னையுடன் கூடிய மொழிவழி ஆந்திர மாகாணம் கிடைத்திருக்கும். ஆனால் தமிழருக்கோ சென்னையை ஆந்திரருக்கு பறிகொடுத்ததோடு, தமிழகம், மலபார் மாவட்டம், தென்கன்னட மாவட்டங்கள் இணைந்த மூன்று மொழி பேசும் கலப்புத் துணை மாகாணம் அமைந்திருக்கும். நல்லவேளையாக அன்றைக்கு ம.பொ.சிவஞானம் தமிழர்கள் சார்பில் நின்று குரல் கொடுத்தார். தமிழ்நாட்டிலிருந்து சென்னையைத் துண்டாடும் நாள் சென்னையில் இரத்த ஆறு ஓடும் நாளாகத்தான் இருக்க முடியும். தங்கள் தலைகளைக் கொடுத்தேனும் தமிழ்நாட்டின் தலை நகரைக் காத்திட வேண்டும் என்று 'தமிழ்முரசு' ஏட்டில் (1.4.1947) முழங்கினார். அதன் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.
  • 1952ஆம் ஆண்டில் மீண்டும் ஆந்திரர்கள் சென்னையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பொட்டிஸ்ரீராமுலு என்பவர் ஆந்திர மாநிலக் கோரிக்கையோடு 'மதராஸ் மனதே' என்று  சென்னை மைலாப்பூரில் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கினார். அவரை நேரில் சந்தித்துப் பேசிய ம.பொ.சி. அவர்கள், "சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை விட்டு ஆந்திர மாநிலம் கோரினால் தமிழரசு கழகம் ஆந்திரர்களுக்கு துணை நிற்கும்" என்று பதிலுரைத்தார்.
  • 16.12.1952இல் பொட்டி ஸ்ரீராமுலு 58வது நாளில் உயிர் துறந்த போது ஆந்திரத்தில் போராட்டம் வெடித்தது. சென்னையில் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. ஆந்திரர்கள் வெறிகொண்டு தமிழர்களை தலைநகரிலே தாக்கினர். ஆந்திரர் போராட்டத்தை கண்டு அஞ்சிய பிரதமர் நேரு தனி ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுமென்று அறிவித்தார். அப்போது தங்குதூரி பிரகாசம் பந்துலு என்பவர் ஆந்திரத்திற்கு தற்காலிக தலைநகராக சென்னை இருக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையை ம.பொ.சி. கடுமையாக எதிர்த்தார். சென்னையை ஆந்திரருக்கு சொந்தமாக்கும் கோரிக்கையை நேரு ஏற்றுக் கொண்டால் உடனே பதவி விலகுவேன் என்றும் அன்றைய முதல்வர் இராசாசி அறிவித்தார். அதன் பிறகு நேரு சென்னை நகரம் அல்லாத தகராறுக்கு இடமில்லா தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு சித்தூர் மாலட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்றும், ஆந்திரத் தலைநகர் பற்றி பின்னால் அறிவிக்கப்படும் என்றும் விளக்கம் கூறி ஆந்திரர்களின் கோரிக்கையை புறக்கணித்தார். 1956இல் மொழிவழி மாகாணம் உருவாக்கப்பட்டு சென்னைத் தமிழ் மாகாணத்திற்கு சென்னை தலைநகரம் என்று அறிவிக்கப்பட்டது.
  • சென்னை மீட்புப் போராட்டத்தில்     திராவிடர் இயக்கத்தினர் எவரும் பங்களிக்க மறுத்தே வந்தனர். மொழிவழித் தேசிய உணர்ச்சி திராவிட இயக்கத்தினர் எவருக்கும் இல்லையென்பது தான் கசப்பான உண்மையாகும்.
சென்னையை மீட்டுக் கொடுத்த ம.பொ.சிக்கு சென்னை நகரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் சிலை நிறுவப்பட்டது. ம.பொ.சி.யை மறந்து விட்டு "சென்னை தினம்" கொண்டாடுவது தலையில்லாத முண்டத்தை கொண்டாடுவதற்கு ஒப்பாகும். வரும் ஆண்டிலாவது  சென்னையை மீட்டுத் தந்த அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.  தமிழ்த்தேசிய அமைப்புகளும் சென்னை மீட்பு வரலாற்றை இந்நாளில் தமிழர்களிடம் கொண்டு சேர்க்குமாறு வேண்டுகிறோம்!

பெரிய’ பலன் தரும் சின்ன வெங்காயம்.


தினமும்சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர். உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக்கொண்டது.
  1. சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம்.
  2. உடல் சூட்டைக் குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  3. கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.
  4. கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம்.
  5. வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம்.
  6. வடகம் கெட்டுவிடாமல் பதப்படுத்திப் பாதுகாக்க, சின்ன வெங்காயம் சேர்த்துத் தயாரித்தால் போதும்.
  7. அம்மை நோய் வராமல் தடுக்கவும் வந்தால் சீக்கிரம் குணமாகவும் சின்ன வெங்காயம் உதவுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு அம்மை வந்தால், அதன் பிறகு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க அம்மை ஏற்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்கள் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துவந்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன

பலன் தருமனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.
  • இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.
  • ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை (Electoral Imbalance) இளநீர் சரி செய்கிறது.
  • இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.
  • இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் ஜெல் என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.
  • இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.


செல்வ மகள் சேமிப்புத்திட்டம்

செல்வ மகள் சேமிப்புத்திட்டம் -

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் மோடி அரசினால் பெண் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். 

இத்திட்டத்தின் கீழ் இது வரை 76 லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டுளதாகவும் 3,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது இந்தக் கணக்கின் பழைய விதி முறைகளில் இருந்து சில விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் இங்குச் செல்வ மகள் திட்டத்தைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில விதிமுறைகளை பார்ப்போம்.

கணக்கைத் திறத்தல் 
ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கை துவங்க இயலும். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளரால் கணக்கைத் திறக்க இயலும். 

தகுதி 

இத்திட்டத்தின் பதிவு காலம் முழுவதும் இந்தப் பெண்குழந்தை பெண் குழந்தை கண்டிப்பாக இந்திய குடியுரிமை பெற்றி இருத்தல் வேண்டும். ஒருவேலை குடியுரிமை மாற்றப்பட்டால் வட்டி பெற இயலாது மற்றும் கணக்கை அத்துடன் உரியக் காலத்திற்கு முன்னரே மூடப்படும். 

காலம் 

கணக்கைத் திறப்பதில் இருந்து 15 ஆண்டுகள் வரை இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய இயலும். இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது அதிகபட்ச முதலீடு 14 வருடங்களே இருந்தது குறிப்பிடத்தக்கது. 

முதலீட்டு முறை 
பணம் மற்றும் செக் வாயிலாக பணம் செலுத்தும் முறை மட்டும் இல்லாமல் நீங்கள் கணக்கு துவங்கிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் மைய வங்கித் தீர்வு இருந்தால் மின்னணு அல்லது இணையம் வாயிலாகவும் சந்தாவை செலுத்தலாம். 

வட்டி விகிதம் 
 சிறு சேமிப்பு திட்டம் போல செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாறிக் கொண்டே வரும். 

2015-2016 வரை 9.2 சதவீதம் இருந்த வட்டி விகிதம் ஜூன் 2016 முதல் 8.6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளை துவங்கு உள்ளவர்கள் எல்லா மதமும் 10-ம் தேதிக்குள் தவணையை கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். ஒரு வேலை தவறினால் வட்டி குறைந்துவிடும் 

முதலீட்டு அளவுகள் 
 குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய இயலும். ஏதேனும் அதிகப்படியான தொகையை டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டி மற்றும் லாபம் ஏதும் இல்லை. கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டும் என்றாலும் திரும்பப்பெறலாம். 

கணக்கைத் தொடராத போது 
 குறைந்தபட்ச தொகையான 1,000 ரூபாயை சரியாகச் செலுத்தவில்லை என்றால் 15 வருடங்கள் கழித்து வரும் போது தபால் நிலையத்தின் இயல்பான வட்டியான வருடத்திற்கு 4 சதவீதமாக மட்டுமே பெற இயலும். 

இடை நிறுத்தப்பட்ட கணக்கை மீண்டும் துவங்குதல்: 
 கணக்கை இடை நிறுத்தப்பட்டு இருக்கும் போது ரூ.50 கடனமாக செலுத்தி மீண்டும் துவங்கலாம். வரி *** இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த தொகைக்குப் பிரிவு 80சி-இன் கீழ் வரிவிலக்கைப் பெறலாம். முதிர்வு ** இந்தக் கணக்கு 21 வயது ஆகும் போது அதன் முதிர்வு காலத்தை அடைந்துவிடும். அதற்குப் பிறகு வட்டி ஏதும் அளிக்கப்படாது. ஆனால் முன்பு கணக்கை மூடும் வரை வட்டி அளிக்கப்படும் என்று இருந்தது. 

கணக்கை இடமாற்றுதல் 
 கணக்கை வெறு வங்கிகளுக்கோ, அல்லது வேறு தபால் நிலைய கிளைகளுக்கோ மாற்ற விரும்பினால் ரூ.100 கட்டணமாகச் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் வீடு மாற்றத்திற்கான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 

திரும்பப் பெறுதல்
 முன்பு ஒருவர் 50 சதவீதம் வரை திரட்டப்பட்ட தொகையில் இருந்து 18 வயது நிரம்பியதற்கான சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்களை செலுத்தி செலவுக்காக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இப்போது எவ்வளவு தொகை கட்டணமாகச் செலுத்த வேண்டுமோ அதை மட்டுமே பெற இயலும். மொத்தமாக எடுக்க வேண்டும் என்றால் ஐந்து தவணையாக எடுத்துக்கொல்லலாம். 

முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுதல் 
முன்பு எப்போது வேண்டும் என்றால் சாத்தியம். ஆனால் இப்போது குறைந்தது 5 ஆண்டுகளை நிறைவு செய்த பிறகே கணக்கை மூட இயலும். சில சமயங்களில் ஏதேனும் மருத்துவ உதவி, நோய், காப்பாளர் போன்ற சில காரணங்களின் போது முன்பாகவே பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளில் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு கணக்குகளின் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும். 

மூடல் நேரத்தில் தேவைப்படும் ஆவணங்கள் 
கணக்கை மூடும் நேரத்தில் அடையாள அட்டை, வீட்டு முகவைச் சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பித்தல் வேண்டும். 

செல்வ மகள் திட்டம் எதனால் முக்கியம்?
 முதலீடு செய்து சேமிப்பதற்கு மியூச்சுவல் ஃபண்ட் பொன்று நிறையப் பல திட்டங்கள் இருந்தாலும் செல்வ மகள் திட்டம் திட்டத்தில் எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லை என்பதே இதன் மிகப்பெரிய சாதகமாகும். மேலும் இதன் மூலம் எவ்வளவு சேமிக்க இயலும், லாபம் பெற இயலும் என்று எல்லா வற்றையும் எளிதாக கணக்கிட இயலும்.