.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Wednesday, 7 September 2016

கேரள அரசுக்கு 'செக்' வைக்க பாண்டியாறு - புன்னம்புழா திட்டம்

கேரள அரசுக்கு 'செக்' வைக்க பாண்டியாறு - புன்னம்புழா திட்டம்

ஊட்டி: சிறுவாணி ஆற்றின் குறுக்கே, அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு, 'செக்' வைக்க, 'பாண்டியாறு - புன்னம்புழா' திட்டத்துக்கு, அரசு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கேரள அரசு, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயன்று வருகிறது. இதனால், நீலகிரி, கோவை மாவட்டங்கள் உட்பட்ட, பவானி, சிறுவாணி நீரை நம்பியுள்ள, 4 லட்சம் ஏக்கர் பரப்பிலான விவசாய நிலமும், பொதுமக்களும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. கேரளாவின் இந்த முயற்சிக்கு, 'செக்' வைக்கும் வகையில், நீலகிரியில் உற்பத்தியாகி, பாண்டியாறு வழியாக, கேரளாவுக்கு செல்லும், 16 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க, 'பாண்டியாறு - புன்னம்புழா' திட்டத்துக்கு, மாநில அரசு, உடனடியாக செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்ற கோஷம், அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலுாரில் உள்ள பாண்டியாற்றின் நீர் முழுவதும் கேரளாவுக்கு சென்று, புன்னம்புழா ஆற்றில் கலந்து, கடலில் கலக்கிறது. இந்த நீரை தமிழகத்துக்கு பயன்படுத்தும் வகையிலும், மின் உற்பத்தி செய்யவும், பாண்டியாறு - புன்னம்புழா நீர்மின் திட்டம், 1969ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, கூடலுார் சுற்றுப்புற பகுதிகளில் பாயும், 10க்கு மேற்பட்ட சிறு ஆறுகளை இணைத்து, மின் உற்பத்திக்கான அணைகள் கட்ட திட்டமிடப்பட்டது.

ஆனால் திட்டத்துக்கு, கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 

இதற்கு காரணம், இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், கேரளாவின் ஜீவநதியான சாலியார் ஆற்றின் நீர்வரத்து, அடியோடு நின்றுவிடும். இன்று, அரசியல் லாபத்துக்காக முல்லைப் பெரியாறு பிரச்னையை, கேரள அரசியல் கட்சிகள் பெரிதாக்கி வருகின்றன. ஆகவே, பாண்டியாறு, புன்னம்புழா திட்டம் உள்ளிட்ட, பிற முக்கிய அணை திட்டங்களை, தமிழக அரசு நடைமுறை படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

கருப்பையாறு என்கிற ஆறு தமிழ்நாட்டில் அணைமுகம் (விளவங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம்) என்ற இடத்தில் உற்பத்தியாகி கேரளாவில் நெய்யாறு அணையில் சென்று கலக்கிறது.

  தமிழகத்தில் பெய்யும் மழையின் மழை நீர் வடிந்துதான் நெய்யாறு அணை பெரும்பாலும் நிரம்புகிறது. 

நெய்யாறு அணையிலிருந்து இடதுகரை சானலின் வழியாக கன்னியாகுமரி மாவட்ட விவசாயத்திற்கு தண்ணீர் வருகிறது. 1984 இருந்து கேரள அரசு இடது கரை சானலில் தண்ணீர் விடுவதில்லை. 

பெரும்பாலான விவசாயிகள் இரப்பர் மர முதலாளியாகிவிட்டனர்.  சானல் தண்ணீருக்கான தேவை பெரும்விவசாயம் செய்பவர்களுக்கு இல்லை மழையே போதும்.  

ஆனால் மற்ற சிறுவிவசாயிகள் விவசாயத்தை மறந்து கூலிகளாகிவிட்டனர். தமிழர்கள் இடது கரை சானலில் தண்ணீர் கேட்டு கேரள அரசை கெஞ்ச வேண்டியதில்லை.  

கருப்பையாறு தண்ணீர் கேரளாவுக்கு போவதை தடுத்து தமிழ்நாட்டை நோக்கி திருப்பினாலேபோதும்.                    

No comments:

Post a Comment