.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Wednesday, 7 September 2016

புதுச்சேரி யூனியன் பிரதேசம் அல்லது ஒன்றியப் பகுதி.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் அல்லது ஒன்றியப் பகுதி.
========================================

இந்தியாவில் இயங்கும் 7 யூனியன் பிரதேசங்களில் ஒன்றான புதுச்சேரி பற்றி பலருக்கும் அதிகம் தெரிவதில்லை. அதை தெரியப் படுத்தும் முயற்சியில் இந்தப் பதிவு.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்ற போதிலும் எதனால் அதை மாநிலம் என்று அழைக்கிறோம். மாநில நிர்வாகத்திற்கும் யூனியன் பிரதேச நிர்வாகத்திற்கும் என்ன வித்தியாசம்.

ஒன்றிரண்டு நகரங்களை உள்ளடக்கிய ஒன்றியப் பகுதி தான் யூனியன் பிரதேசம்.இங்கு மாநிலங்களைப் போல் தேர்தல் மூலம் அரசமைக்காமல், குடியரசு தலைவர் அமைத்த ஆளுநர்கள் மூலம் ஆட்சி நடத்தப்படும்.
இதுவே மாநிலத்திற்கும் , ஒன்றியப் பகுதிக்கும் உள்ள வித்தியாசம்.

இந்த 7 ஒன்றியப் பகுதிகளில், புதுச்சேரியும், டெல்லி யும் மட்டும் விதிவிலக்கு. இவர்களுக்கு தேர்தல் மூலம் அரசமைக்கும் உரிமை உண்டு. இருப்பினும், ஒரு சில சட்டங்களுக்கு , குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று அவரால் நியமிக்கப்பட்ட ஆளுனர்களாலே(கவர்னர்) முடிவுகள் எடுக்கப்படும்.

இதனால் தான், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உண்டு. நாமும் புதுவை மாநிலம் என்று அழைக்கிறோம்.

புதுச்சேரியின் வரலாறு :

4 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுச்சேரி , காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவர்களின் கைகளில் இருந்தது.பின் பத்தாம் நூற்றாண்டில் நெற்களஞ்சியத்தை ஆண்ட சோழர்களின் கைக்கு வந்து 13ஆம் நூறாண்டில் பாண்டிய அரசிடம் சென்றது.

அதற்கு பின் , வெள்ளையர்களின் ஆட்சியில் புதுச்சேரி பிரான்சிடம் சிக்கியது.பிரஞ்சுக்கார்கள் ஆந்திராவில் உள்ள ஏனம் பகுதியையும் , கேரளாவில் உள்ள மாஹி யையும் , தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள காரைக்கால் யும் அடுத்தடுத்து பிடித்து அவர்கள் வசப் படுத்தினர்.

இதில் புதுச்சேரி மீண்டும் பந்தாடப் பட்டது.தமிழகத்தை ஆண்ட ஆங்கிலேயர்களிடம் சிக்கி மீண்டும் பிரஞ்சுக்காரகளால் மீட்கப் பட்டு அவர்கள் கைக்கே வந்தது.

சுதந்திரம் பெற்று பிரஞ்சுக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது அவர்கள் ஆண்ட பகுதிகளைக் கொண்டு தனி ஒன்றியப் பகுதி அமைக்கப்பட்டது.

இதில் அந்த அந்த ஊர்களுக்கு வேறு மாநிலத்துடன் இணைய விருப்பம் இருக்கிறதா என்று அழைப்பு விடுத்த போதும், காரைக்கால் , மாஹி மற்றும் ஏனம் புதுச்சேரியுடனே இருக்க விருப்பம் தெரிவித்தன. இதனால் தான் இன்று வரை புதுவை அரசை சேர்ந்த மற்ற மூன்று ஊர்களும் ஆளுக்கொரு மூலையில் இருக்கின்றன.

புதுவையை பற்றி நீங்கள் அறியாத வரலாறு இன்னும் இருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் பிரான்சு ஜெர்மனை எதிர்த்து போராடிய போது பிரஞ்சுக்கார்கள் ஆண்ட பகுதிகளில் இருந்தும் காலனி ஆட்சி செய்த பகுதிகளில் இருந்தும் ஆட்களை கொண்டு வந்து குவித்தனர்.

அவ்வாறு போரில் ஈடுபட்டோருக்கு குடியுரிமைகளும் வழங்கி அவர்கள் மூலம் அவர்கள் தலைமுறையில் வரும் அவனைவரும் பிரெஞ்சு குடியுரிமை பெறும் சட்டத்தையும் இயற்றியது.

இது போக, பிரான்சு ஒரு கட்டத்திற்கு மேல் தன் நாட்டின் மக்கள் தொகை குறைவதை கண்டு அஞ்சியது.அவர்கள் நாட்டின் மக்கள் குழந்தைகளே பெற்றுக் கொள்ளாமல் இருந்ததும், ஒன்றோடு நிறுத்தி விடுவதுமே அதற்கு காரணம்.

தன் இனம் அழிந்து விடும் பயத்தில் மீண்டும் ஆட்சி செய்த இடங்களில் குடியுரிமை வழங்குவதாக மக்களுக்கு அழைப்பு விடுத்தது. இதனால் தான் இன்று பிரான்சில் அதன் ஆட்சின் கீழ் இருந்த எல்லா ஊர்களில் இருந்தும் மக்கள் வாழ்கின்றனர்.புதுவை , காரைக்கால் , மாஹி , ஏனம் பகுதிகளில் பிரஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் அதிகம் இருக்கின்றனர் .

பிரான்சின் தாக்கமும், பிரஞ்சு மொழியின் தாக்கமும் இன்னமும் இருக்கிறது.இந்த வரலாறு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியில் நீதி அழகை விட வீதி அழகு உள்ளது என்பர்.அந்த அளவுக்கு புதுவையின் வீதிகளை செங்குத்து மற்றும் நேர்கோடுகளாக அமைத்திருப்பர்.

இவையெல்லாம் போக, 

புதுவை வில்லியனூர் சிவன் கோவில் மன்னர் ஆட்சிக்கு சான்று.

புதுவை வீதிகள் பிரஞ்சுகாரர்களின் ஆட்சிக்கு சான்று.

பாரதி மீது கொண்ட பற்றினாலே பாரதிதாசன் என்று பெயர் சூட்டிக் கொண்டு புரட்சிக் கவிதைகள் படைத்த எங்கள் சுப்புரத்தினம் புதுவையின் இலக்கிய வளர்சிக்கு சான்று.

பெண்ணாய் பிறந்து வாழ்ந்து மறைந்து 63 நாயன்மார்களுள் ஒருவராகி 12 திருமறைகளுல் ஒன்றைப் படைத்த எங்கள் புனிதவதி புதுவையின் தமிழுக்கு சான்று.

இத்தனை சிறப்பு மிக்க நம் புதுவையைப் பற்றி தமிழ்நாட்டில் இருக்கும் பலருக்கும் தெரிந்தது , பாண்டிச்சேரி மில்லியும், நாராயணசாமியும் தான்.

No comments:

Post a Comment