கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை, இனி திருமணமான மகன்களுக்கும் பொருந்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசுப் பணியில் இருப்பவர்கள் மரணமடைந்தால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு, அவரின் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்குவது நடைமுறை. ஆனால் திருமணமான மகனுக்கு இந்த வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பணியாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பணிக் காலத்தில் உயிரிழக்கும் ஊழியரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைவாய்ப்பு, இனி திருமணமான மகன்களுக்கும் பொருந்தும். இதற்கு மற்ற நிபந்தனைகள் பூர்த்தியாகும் நிலையில் எவ்வித பிரச்னையும் இன்றி பணி வழங்கப்படும். வருமானம் ஈட்டி வந்தவரை திடீரென இழக்கும் குடும்பத்தினருக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 வயதுக்கு முன், மருத்துவக் காரணங்களுக்காக விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment