.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Sunday, 28 August 2016

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு (7) அடிகள் நடப்பதற்கு என்ன பொருள் ?

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு (7) அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்  ?
**************************

சமஸ்கிரதத்தில் இதை " சப்தபதி " என்று கூறுவார்கள்.  ஆதாவது  ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேரந்து நடந்து வருவதாகும்.  அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம்
இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு தனது பிரார்த்தனையை சொல்கிறான்.

♥ முதல் அடி  :  பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்

♥ இரண்டாம் அடி  :  ஆரோக்கியமாக வாழ வேண்டும்

♥ மூன்றாம் அடி  :  நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்

♥ நான்காம் அடி  :  சுகத்தையும் செல்வத்தையும் அளிக்க வேண்டும்

♥ ஐந்தாம் அடி  :  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து பெற வேண்டும்

♥ ஆறாம் அடி  :  நாட்டில் நல்ல பருவங்கள் தொடர வேண்டும்

♥ ஏழாம் அடி  :  தர்மங்கள் நிலைக்க வேண்டும்

என்று பிராப்திப்பதாக சொல்லப்படுகிறது.  இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் பூக்ஷமமான மனோவியல் விசயத்தை இந்து தர்மத்தில்  உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.  இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால்  அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்பது சாஸ்திரம். உதாரணமாக சாலையில்  நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவர்  நடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாக நடக்க நேர்ந்தால் ,  ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிடுவோம்.  முழுமையாக ஏழு அடிகள்  ஒன்றாக நடக்க மாட்டோம்.  இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள்ளாக நடந்து விடும்.  இதை
அறிந்த முன்னோர்கள் ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதையும் நாம் உணர வேண்டும்..........

No comments:

Post a Comment