.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Saturday 27 August 2016

கேப்டன் விஜயகாந்த்

கேப்டன்  விஜயகாந்த்

விஜயகாந்த் எனப்படும் 
அ. விஜயராஜ் நாயுடு ஒரு திரைப்படநடிகர். தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவர். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும்,எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

பெரும்பாலும் ரஜினிக்கு பிறகு இருந்து அஜித், விஜய் நடிக்க வரும்வரை இருந்த காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளின் பிடித்தமான ஹீரோ விஜயகாந்தாக தான் இருந்தார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் பிடிக்காத தீவிரவாதிகளே கிடையாது, படத்தில்.. அது மட்டுமல்லாது தமிழில் குடும்பத்துடன் பார்க்கும் சில நடிகர்களின் திரைப்படங்களில் இவரது படங்களும் உண்டு. ஆக்‌ஷன் படம் வேறு. குழந்தைகளுக்கு ஒரே குதூகலம் தான் போங்க. அப்படி விஜயகாந்தை ஒரு நடிகனா பார்க்காமல் நாட்டை காப்பாற்றும் ஒருவராக பார்த்தவர்கள் பலர்.

விஜயராஜ்

விஜயராஜ் (இயற்பெயராம்) மதுரையில் அழகர்சாமி - ஆண்டாள் தம்பதியின் மூன்றாம் குழந்தையாக பிறந்தவர். இளம் வயதில் முட்டு சந்து நாடார் கடைல பல்பம் வாங்கி திண்பது, தீப்பெட்டி சீட்டு, கோலி, கில்லி ஆடுவது இவரின் வாடிக்கை. நம்மைப்போல இருக்கார்ல. மதுரை தாவணிகளை கவருவதற்காக கையை விட்டுட்டு சைக்கிள் ஓட்டுவது பிடித்தமானது... ஆனாலும் அண்ணன் ஒரு பூந்தோட்ட காவல்காரன்.

காதல் மன்னன்

இப்படி புயலாய் போய்ட்டு இருந்தவர் வாழ்வில் இந்தி போராட்டம் வந்துள்ளது., அதனால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ரைஸ்மில்லை பார்க்க போய்ட்டார். அங்கதான் அந்த மேட்டர் நடந்துருக்கு... இது இன்ன வரைக்கும் யாருக்கும் தெரியல...

தலைவர் மில்லு பக்கத்துல இருக்குற ஒரு டீ க்கடைல நின்னு தம் பத்த வைக்கிறது வழக்கம். அந்த ஸ்டைல பாத்து எதிர் வீட்டி ஜன்னல் ஒண்ணு (கண்கள் இரண்டால்  ’ஸ்வாதி’ மாதிரின்னு வச்சுக்குங்களேன்) பிக்கப் ஆயிடுச்சு. அதுக்காக எப்பயும் நம்பியார் மாதிரி இருக்கும் அண்ணன் பூப்போட்ட சட்டை & பெல்ஸ் பேண்டு கணக்கா மில்லுக்கு வரப்போக மாறிட்டார். இங்க தான் கதைல ஒரு டுவிஸ்டே..! பாவம் திடீர்னு ஒரு நாள் எதிர்வீட்டு ஜன்னல் திறக்கவே இல்லை. விசாரிச்சு பார்த்தா அது லீவுக்கு வந்த குயிலாம். அதான் பறந்து போயிடுச்சு. அண்ணன் தான் பாவம் மனசு உடைஞ்சு போயிட்டாராம். இது மாதிரி அவர் வாழ்க்கைல இன்னும் 2 காதல்களும் வந்து போயிருக்கு..!?

மதுரைல சேனாஸ் சினிமா கம்பெனி  வச்சிருந்த மர்சூக் & எம்.ஏ.காஜா, இந்த 2 பேரும் தான் கேப்டனின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டவர்கள். பின்பு எஸ்.ஏ சந்திரசேகர் இவர் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். அதனால் தான் இன்னமும் தான் அர்ச்சனை செய்யும் போது சந்திரசேகர் பெயருக்கும் சேர்த்தே அர்ச்சனை செய்து வருகிறார். இன்னொருவர் இவரது நண்பர் அ.செ. இப்றாஹீம் ராவுத்தர், பால்ய பருவத்திலிருந்தே நண்பர்களாக உள்ளனர். அதனால் தான் வேறு மொழிப்படங்களை ஒத்துக்கொள்ளாதவர் இவருக்காக ’மே டே’ என்ற ஆங்கிலப்படத்திற்கு பூஜை போட்டார்., அதுவும் வெளிவரவில்லையாம்.

தமிழ் சினிமாவின் முதல் 3-டி படமான அன்னைபூமி யின் ஹீரோ சாத்சாத் விஜயகாந்தே.! 1984-ம் வருடம் பதினெட்டு படங்களில் நடித்து உச்சத்தில் இருந்தார். அதில் சில... சுந்தர்ராஜன் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள் மற்றும் ஆபாவாணன் இயக்கிய உரிமைக்குரல். என நடிப்பில் பல பரிணாமங்களை காட்டிய ஆண்டு அது. அந்த ஆண்டே கலைஞர் கையால் ஷீல்டு வாங்கினார்., அன்றிலிருந்து கலைப்புலி தாணுவால் புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டார். அதுவே இன்று உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களால் அறியப்படுகிறது...

எம்.ஜி.ஆரும் கறுப்பு எம்.ஜி.ஆரும்

விஜயகாந்துக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர். ஆனால் அவரால் எம்.ஜி.ஆர் கூட சேர்ந்து ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனோ?? திமுக பக்கம் ஓவரா சாய்ந்ததாலோ என்னவோ?  தெரியல.. 

ஆனால் வி.என்.ஜான்கி அம்மையாரோடு நல்லா பழகியவர் கேப்டன். தன் பிறந்த நாளுக்கு வருஷா வர்ஷம் 50ஆயிரம் ரூபாய் ராமாவரம் காது கேளாதோர் பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்து வர்றார். அந்த மதிப்பின் காரணமா தான் எம்.ஜி.ஆர். பயன்படுதிய பிரச்சார வேனை அன்பளிப்பா கொடுத்தாங்கலாம்.

இது மட்டும் இல்லீங்க... வாரம் 300 பேருக்கு ஞாயிற்றுகிழமை அன்னிக்கு  அன்னதானம், வருஷா வருஷம் இலவசமா ஏழைகளுக்கு திருமணம், கார்கில்லுக்கு 5 இலட்சம்., ஒரிசாவுக்கு 2 இலட்சம்., குஜராத் பூகம்ப நிதிக்கு 2 இலட்சம்., ஆந்திரா புயலுக்கு 2 இலட்சம்., சுனாமி நிவாரணமா தமிழ்நாட்டுக்கு 11 இலட்சம், பாண்டிசேரிக்கு 2 இலட்சம்., கும்பகோணத்துல உயிரிழந்த குழந்தைகளுக்கு தலா 1 இலட்சம்., இப்ப கூட இலங்கைக்கு 6 இலட்சம்னு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் கேப்டன் விஜயகாந்தோடது...

அதனால தான் அவரை கறுப்பு எம்.ஜி.ஆர்-னு தேமுதிக காரங்க கூப்பிடுறாங்க., நாமளும் ஒத்துக்கிட்டு தான் ஆகணும்., அதுல ஒண்ணும் தப்பில்ல. தமிழ்நாட்டுல சம்பாதிச்சு வேற மாநிலத்துல் சொத்து வாங்கி குமிக்கிறவங்க மத்தில தமிழனுக்காக மட்டுமில்லாம மத்தவங்களுக்காகவும் இறக்கப்படுற நம்ம கேப்டன் எவ்வளவோ பரவாயில்ல...

கேப்டனும் பிரபாகரனும்

விஜயகாந்தும் தலைவர் பிரபாகரன் மீது பற்று கொண்டவரே. அதனால தான் ஈழத்தமிழர்கள் இன்னல் தீரும்வரை  தான் பிறந்த நாளே கொண்டாட போவதில்லை என்று கூறியவர். மேலும் 60 பேர் தாயகம் திரும்ப பல உதவிகளை செய்தவர்.

பலர் எதிர்த்த போதும் தன்னுடைய 100வது படத்துக்கு ’கேப்டன் பிரபாகரன்’ என்று பெயரிட்டவர். தன்னுடைய மகனுக்கும் கூட அப்பெயரே வைத்தார்.

விஜயகாந்த்

எனப்படும் அ. விஜயராஜ் நாயுடு ஒரு திரைப்படநடிகர். தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவர். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும்,எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

திரைப்பட உலகில்

இயக்குநர் காஜா 'விஜயராஜ்' என்னும் பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார். திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்குவந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார்.இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார். 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம்தான் இவருக்குகேப்டன் என்னும் அடை மொழியைத் தந்தது.

மண வாழ்க்கை

விஜயகாந்த், 1990 ஆம் ஆண்டில் பிரேமலதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

அரசியல் உலகில்

அதன் தொடர்ச்சியாக 1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார்.

அரசியல் கட்சி

2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

சட்டமன்ற உறுப்பினர்

2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுதமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்னார். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011இரிஷிவந்தியம் தொகுதியிலில்போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது.2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்றஉறுப்பினராகவும்,எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், ரமனா, போன்ற படங்களும் லியாகத் அலிகான் அவர்களின் அனல் தெறிக்கும் வசனங்களும் அவருடைய அரசியல் பயணத்திற்கு விதையாக இருந்தது என்றால் மிகையாகாது...

கட்சியின் தலைவர் ஆனதால் தானே முன்வந்து நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தவர் கேப்டன் எனபது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment