.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Sunday, 18 September 2016

அடுத்த ஆண்டு முதல் டிஜிட்டல் கல்விச் சான்றிதழ்களை வழங்க மத்திய அரசு திட்டம்!!!

அடுத்த ஆண்டு முதல் டிஜிட்டல் கல்விச் சான்றிதழ்களை வழங்க மத்திய அரசு திட்டம்!!!

🌻அடுத்த கல்வியாண்டு முதல் பட்டங்களும், கல்விச் சான்றிதழ்களும் டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை
எடுத்து வருகிறது.

🌻தேசியக் கல்வி ஆவணக் காப்பகம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

🌻 அதில் பங்கேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:

🌻நாட்டில் உள்ள அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக, "டிஜிட்டல் இந்தியா' பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கியுள்ளார்.

🌻முதலீட்டாளர்களின் நிதி வளங்களைப் பாதுகாக்கும் வகையில், நிதி சார்ந்த பத்திரங்களை டிஜிட்டல்மயமாக்கும் பணி, ஏற்கெனவே நிறைவடைந்து விட்டது.

🌻 இந்நிலையில், கல்விச் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக தேசியக் கல்வி ஆவணக் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.

🌻இந்த முறையில், புதிய கல்விச் சான்றிதழ்களை மாணவர்கள் பெறுவதோடு, தாங்கள் ஏற்கெனவே பெற்ற சான்றிதழ்களையும் இணையத்தில் பதிவேற்றிக் கொள்ளலாம்.

🌻 அவர்களது விவரப் பட்டியலில் அனைத்துச் சான்றிதழ்களும் கிடைக்கும். 

🌻இதன் மூலம் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் பணியில் அமர்த்துபவர்களுக்கு எளிதில் கிடைப்பதோடு, சான்றிதழ்களைப் பெறுவதற்காக பல்கலைக்கழகங்களை நேரில் அணுகுவதும் குறையும் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

No comments:

Post a Comment