.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Sunday, 22 November 2015

விடுமுறை

மழையின் காரணமாக நாளை விருதுநகா் மாவட்ட  பள்ளிகளுக்கு விடுமுறை

Sunday, 4 October 2015

காலாண்டு தேர்வில் பின்தங்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி


  • பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் எந்தெந்த பாடங்களில்பின்தங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொண்டு சிறப்பு பயிற்சிகள் வழங்கும் நோக்கில், கோவை மாவட்டத்தில் காலாண்டு தேர்வுக்கான மதிப்பீட்டு பணி துவங்கியுள்ளது.
  • பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது, சிறப்பு வகுப்புகள் நடந்து வருகிறது. 
  • காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கவுள்ளன. இந்நிலையில், மாணவர்களின் பாடவாரியாக மதிப்பெண் விபரம், தேர்ச்சி விகிதம், கடந்த மாதங்களில் நடத்தப்பட்ட மாதந்திர தேர்வுகளுடன் ஒப்பிடுகையில் காலாண்டு தேர்வில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் என முழுமையான மதிப்பீடுகளை மாவட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளிலும் விடைத்தாள் திருத்தும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும், இணை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு மதிப்பீடு குறித்து ஆய்வு நடத்தப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில், மதிப்பீடு தொகுப்புகளை சேகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
  • முதன்மை கல்வி அதிகாரி அருள்முருகன் கூறுகையில், ''காலாண்டு தேர்வு முடிவுகளை மதிப்பீடு செய்வது சார்ந்த படிவங்கள் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 
  • இதில், எந்தெந்த பாடங்களில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர் என்பதை ஆய்வு செய்து, சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Sunday, 20 September 2015

பாடம் நடத்த ஆசிரியருக்கு என்ன மனநிலை வேண்டும


  • வகுப்பில் நுழைந்தவுடன் ஆசிரியர்கள் புன்னகையுடன் மாணவர்களைப் பார்த்து, தங்களுக்குள் ஒரு சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும
  • ‘என் முன்னே உள்ள இவர்கள் யார்? நான் இங்கே செய்ய வேண்டியது என்ன?’
  • அவ்வாறு கேட்டுக் கொண்டால் அவர்களுக்குள்ளிருந்து ஒரு பதில் கிடைக்கும்:
  • ‘சமுதாயத்தின் பல நிலைகளிலிருந்து வந்துள்ள இந்த மாணவர்கள் பல நூற்றாண்டுகளாக அறிவைத் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பல நூற்றாண்டுகளாகக் குறிப்பிட்ட ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த கல்வியை நாடி இவர்கள் வெகு தூரத்திலிருந்து வந்துள்ளார்கள். நான் இங்கே இவர்களுக்குச் சிறந்த அறிவையும் ஊக்கத்தையும் அளிப்பதற்காக உள்ளேன்.’
  • ஆசிரியர்களே! இந்த மனப்பான்மையுடன் நீங்கள் கற்றுத் தரும்போது உங்களது ஒவ்வொரு வார்த்தையும் மாணவர்களை ஊக்குவித்துச் சிறப்பாகச் செயலாற்றத் தூண்டும். அப்போது நீங்கள் சம்பளம் வாங்கும் வெறும் தொழிலாளியாக, தனிமனிதனாக இல்லாமல் உண்மையில் சிறந்த ஆசிரியராக – சிறந்த குடிமகனாக – முழு மனிதனாக உயர்வீர்கள்.
  • தனிமனிதன்- முழுமனிதன்
  • நீங்கள் வளர்ச்சியடைய இரண்டு அம்சங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அவை: தனிமனிதன், முழுமனிதன்.
  • தனிமனிதனாக நீங்கள், ஆசைகள், விருப்பு‚வெறுப்புகள், லட்சியங்கள் மற்றும் பரம்பரைப் பண்புகள் ஆகியவற்றின் வரையறைக்கு உட்பட்டவர்களாக உள்ளீர்கள்.
  • ஆனால் முழுமனிதனாக உயர்ந்தவுடன் பரந்து, விரிந்து பிறரது வாழ்க்கையிலும் நுழைந்து, இயைந்து வாழ ஆரம்பிக்கிறீர்கள். இது தனிமனிதனுக்கும் முழுமனிதனுக்கும் உள்ள வேறுபாடு. முழுமனிதன் என்ற வார்த்தை தனிமனிதன் அல்லது தனித்துவம் என்பதைவிட அதிக பொருள் பொதிந்த
  • மனிதநல ஆர்வலரான ஆங்கில அறிஞர் பெர்ட்ரன்ட் ரஸல் கூறுவார்: ‘தனிமனிதர்கள் பில்லியர்டு பந்துகளைப் போன்றவர்கள். தனிமனிதன் பிறருடன் இயைந்து வாழ முடியாமல் அவர்களுடன் அடிக்கடி மோதிக் கொள்கிறான்’.
  • தனிமனித நிலையில் ஆசிரியர்கள் பிற ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் மோதிக் கொள்கின்றனர். ஆனால் முழுமனிதனாக மாறியதும் நாம் மற்றவர்களின் உள்ளங்களில் நுழையும் திறமையைப் பெற்றுவிடுகிறோம். அவர்களும் நம் உள்ளங்களில் இடம் பிடிக்கின்றனர். அப்போது பிற ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் இணைந்து ஒரே குழுவாக வாழும் பெரும் திறமையைப் பெறுகிறோம்.
  • இப்படி தனிமனிதனிலிருந்து முழுமனிதனாக மாறும்போது நாம் சக்தி மிக்கவர்கள் ஆவோம். இது ஓர் ஆன்மிக வளர்ச்சி.
  • தனிமனிதனாக நீங்கள் புலன்களால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். ஆனால் சமுதாயத்தில் உணர்வுபூர்வமாகப் பங்கெடுக்கும்போது அந்தக் கட்டுப்பாட்டைக் கடந்து விடுகிறீர்கள்.
  • அப்போது நீங்கள் முழு மனிதன் ஆகிறீர்கள். அன்பு செலுத்தவும், அன்பைப் பெறவும் உரிய ஆற்றல் உங்களுக்குள்ளே தோன்றிவிடுகிறது. தனிமனிதத் தன்மை என்பது புலன்களால் கட்டுப்படுத்தப்பட்ட அகங்காரம். அக்கட்டுப்பாட்டை அகங்காரம் கடக்கும்போது முழுமனிதத் தன்மையாக உருவெடுக்கிறது.
  • ஸ்ரீராமகிருஷ்ணர் இதனைப் ‘பக்குவப்படாத அகங்காரம்’ மற்றும் ‘பக்குவப்பட்ட அகங்காரம்’ என்பார்.